அடையாளம் தெரியாத ஆண் பிணம்

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் பிணமாக கிடந்த ஆண் யார் அவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடையாளம் தெரியாத ஆண் பிணம்
Published on

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து கட்டிகானப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) முகமது சுபன் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com