காட்டு பகுதியில் ஆண் பிணம்

கூடங்குளம் அருகே காட்டு பகுதியில் ஆண் பிணம் கிடந்தது.
காட்டு பகுதியில் ஆண் பிணம்
Published on

கூடங்குளம்:

கூடங்குளம் அருகே சங்கரி கிராமத்தின் காட்டுப்பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக கூடங்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com