தி.மு.க.வுக்கு மல்லை சத்யா ஆதரவு - தீர்மானங்கள் நிறைவேற்றம்

தி.மு.க. கூட்டணிக்கு திராவிட வெற்றிக் கழகம் ஆதரவை தெரிவித்துள்ளது.
தி.மு.க.வுக்கு மல்லை சத்யா ஆதரவு - தீர்மானங்கள் நிறைவேற்றம்
Published on

சென்னை,

திராவிட வெற்றிக்கழக பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவராக மல்லை சத்யா, பொதுச் செயலாளராக கராத்தே பழனிசாமி, பொருளாளராக வாசுகி பெரியார் தாசன், துணைப் பொதுச் செயலாளராக வக்கீல் ஆனந்தராஜ், ஆரணி அரசு பிரபாகரன், பாண்டியராஜன், கோவை ஆனந்த், மாநில செயலாளர்கள் பார்த்திபன், அரியலூர் மாணிக்கவாசு, சங்கரன்கோவில் ஆறுமுகசாமி, பாலசுப்பிரமணியம், கோடை திரவியம், மதுரை பரமேஸ்வரன், குரோம்பேட்டை முஜிபுர் ரகுமான், ஆட்சி மன்ற குழு உறுப்பினராக செல்வ பாண்டியன், வல்லம் கோபி, காஞ்சி வளையாபதி, கவுரி குமார், வக்கீல் சசிகுமார், பாஸ்கர், மணிகண்டன் ராமச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

தி.மு.க. ஆட்சி தொடர்வதற்கு உறுதுணையாக நிற்க வேண்டும். சட்டமன்ற பொது தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு திராவிட வெற்றி கழகம் ஆதரவை தெரிவித்துக் கொள்வது. மேலும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க கேட்டுக்கொள்வது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com