மதிமுகவில் இருந்து நீக்கம்: அடுத்த வாரம் ஆதரவாளர்களை சந்திக்கும் மல்லை சத்யா


மதிமுகவில் இருந்து நீக்கம்: அடுத்த வாரம் ஆதரவாளர்களை சந்திக்கும் மல்லை சத்யா
x

மதிமுக துணை பொதுச்செயலாளராக செயல்பட்டவர் மல்லை சத்யா

சென்னை

மதிமுக துணை பொதுச்செயலாளராக செயல்பட்டவர் மல்லை சத்யா. இவருக்கும் பொதுச்செயலாளர் வைகோவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மதிமுக முதன்மை செயலாளராக துரை வைகோ பதவியேற்றதுமுதல் இந்த மோதல் தீவிரமடைந்தது.

மேலும், வைகோவுக்கு எதிராக தனது ஆதரவாளர்களுடன் மல்லை சத்யா கடந்த மாதம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக மல்லை சத்யா மதிமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். மேலும், மல்லை சத்யாவிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இதையடுத்து, வைகோவுக்கு மல்லை சத்யா விளக்க கடிதம் அனுப்பினார். ஆனால், அந்த விளக்கத்தில் திருப்தி இல்லை எனக்கூறி மல்லை சத்யாவை மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கி கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று அறிவித்துள்ளார்.

இந்நிலையில், மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டது குறித்து மல்லை சத்யாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த மல்லை சத்யா கூறியதாவது,

ஒரு தலைவராக வைகோ தோற்றுவிட்டார். என் மீதான நடவடிக்கை எதிர்பார்த்த ஒன்றுதான். துரை வைகோ வருகைக்குப்பின் மதிமுக பின்னடைவை சந்தித்துள்ளது. தனது மகன் துரை வைகோ குறித்தே வைகோ சிந்திக்கிறார். ஆதரவாளர்களை அடுத்த வாரம் திங்கட்கிழமை சந்தித்து ஜனநாயகபூர்வமாக பேசி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பேன்

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story