

சென்னை,
சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற எழுத்து தேர்வில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் முறைகேடு செய்துள்ளனர். இதையடுத்து வடமாநிலத்தை சேர்ந்த 30 நபர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அரியானா மற்றும் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் காதில் 'புளுடூத்' வைத்துக்கொண்டு தேர்வில் மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.