மாமல்லபுரம்: சுற்றுலா பயணிகளை தாக்கிய கடற்படை என்ஜினீயர் கைது

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து காயமடைந்த நபர்களை மீட்டு மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கைது
Published on

மாமல்லபுரம்,

டெல்லியை சேர்ந்தவர் ஆஷிஷ் சவுத்ரி. இவர் விசாகப்பட்டினம் கடற்படை பிரிவில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர் குடும்பத்தினருடன் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்திருந்தார். அவர் வெண்ணை உருண்டைக்கல் பாறையின் சறுக்கு பகுதியில், மற்ற சுற்றுலா பயணிகள் புகைப்படங்கள் எடுக்க இடையூறாக குடும்பத்தினருடன் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது.

கைது

அப்போது அங்கு வந்த சக சுற்றுலா பயணிகள் அவர்களை நகர்ந்திருக்க கூறியபோது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆஷிஷ் சவுத்ரி வாக்குவாதத்தில் ஈடுபட்டு பூந்தமல்லியைச் சேர்ந்த திவ்யா, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நந்தகுமார். தொல்லியல்துறை வளாக தனியார் நிறுவன பாதுகாவலர் நேதாஜி, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சுந்தர் ஆகியோரை தாக்கினார். இதில் அவர்கள் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் போலீசார் விரைந்து வந்து காயமடைந்த நபர்களை மீட்டு மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆஷிஷ் சவுத்ரியை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com