சமநிலையை இழந்து பேசுகிறார் மம்தா பானர்ஜி- மாணிக்கம் தாகூர்

பாஜகவுக்கு எதிராக எப்படி போராட வேண்டும் என்று காங்கிரசுக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
சமநிலையை இழந்து பேசுகிறார் மம்தா பானர்ஜி- மாணிக்கம் தாகூர்
Published on

சென்னை,

மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நடியா மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது இங்கிருந்து பல அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக தமிழகத்துக்கு தேர்தல் ஆணையத்தால் அனுப்பப்பட்டுள்ளனர். இது குறித்து பாஜகவுடன் திமுகவும், காங்கிரசும் ரகசியக் கூட்டணி வைத்துள்ளதாக பேசியிருப்பதற்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

பாஜகவிற்கு எதிராக அனைவரும் ஒன்றாக போராட வேண்டிய இந்த நேரத்தில் மம்தா பானர்ஜி சமநிலையை இழந்து பேசுவதாகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பலவீனப்படுத்தும்.

பாஜகவுக்கு எதிராக எப்படி போராட வேண்டும் என்று காங்கிரசுக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை. தேசிய ஜனநாயகக்கூட்டணிக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரத்தில் மம்தாவின் இந்த கருத்து மிகவும் பொறுப்பற்றது மற்றும் கண்டிக்கத்தக்கது எனவும் மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com