2 நாடாளுமன்றக் குழு தலைவர் பதவிகளை இழந்தது மம்தா கட்சி; திருச்சி சிவா, கனிமொழி மீண்டும் நியமனம்

2 நாடாளுமன்றக் குழுக்களின் தலைவர் பதவிகளை மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் இழந்தது. அதே சமயத்தில், திருச்சி சிவா, கனிமொழி ஆகியோர் தங்களது தலைவர் பதவிகளை தக்க வைத்துக் கொண்டன
2 நாடாளுமன்றக் குழு தலைவர் பதவிகளை இழந்தது மம்தா கட்சி;
திருச்சி சிவா, கனிமொழி மீண்டும் நியமனம்
Published on: 

மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் பல்வேறு துறைரீதியான நாடாளுமன்ற நிலைக்குழுக்களை மாற்றி அமைத்தனர். அதில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, 2 குழுக்களின் தலைவர் பதவிகளை இழந்தது. வர்த்தகம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் பதவி, திரிணாமுல் காங்கிரசின் டோலா சென்னிடம் இருந்து பா.ஜனதாவின் சுதன்சு திரிவேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரசின் அதிருப்தி தலைவர் ககோலி கோஷ் தஸ்திதருக்கு மம்தா கட்சி எம்.பி. கீர்த்தி ஆசாத் வகித்த ரசாயனம் மற்றும் உரம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

கனிமொழி

அதே சமயத்தில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளனர். உதாரணமாக, தி.மு.க.வைச் சேர்ந்த திருச்சி சிவா, தொழில் துறை தொடர்பான நாடாளுமன்ற குழுவின் தலைவராகவும், கனிமொழி, உணவு, நுகர்வோர் விவகாரம் மற்றும் பொது வினியோக நாடாளுமன்ற குழுவின் தலைவராகவும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதுபோல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசிதரூர், வெளியுறவு தொடர்பான நாடாளுமன்ற குழுவின் தலைவராகவும், சரண்ஜித்சிங் சன்னி, வேளாண்மை தொடர்பான நாடாளுமன்ற குழுவின் தலைவராகவும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ், சமாஜ்வாடி

கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் தொடர்பான நாடாளுமன்ற குழு வின் தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சியின் முகுல் வாஸ்னிக், ஊரக வளர்ச் சிக்கான குழுவின் தலைவர் பதவியை காங்கிரசின் சப்தகிரி சங்கர் உலகா, சுகாதாரம் தொடர்பான நாடாளுமன்ற குழுவின் தலைவர் பதவியை சமாஜ்வாடி கட்சியின் ராம்கோபால் வர்மா ஆகியோர் தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.

பா.ஜனதாவின் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதாதளத்தின் சஞ்சய்குமார் ஜா, சிவசேனாவின் ஸ்ரீரங் பர்னே ஆகியோரும் அவரவர் பதவிகளில் மீண்டும் நிய மிக்கப்பட்டுள்ளனர். பா.ஜனதாவைச் சேர்ந்த அனுராக் தாக்குர், ராஜீவ் பிரதாப் ரூடி, பார்த்ருஹரி மஹதாப், ராதாமோகன் தாஸ் அகர்வால், நிஷிகாந்த் துபே, மேதா விஷ்ரம் குல் கர்னி ஆகியேரா பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com