தவெக தலைவர் விஜய் மீது மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு

விஜய்யை பார்ப்பதற்காக பெரும் கூட்டம் திரண்டு இருந்தது.
தவெக தலைவர் விஜய் மீது மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு
Published on

சென்னை,

சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் சூடு பிடித்துள்ளது. அந்த வகையில் த.வெ.க தலைவர் விஜய் தொடர்ந்து, பிரசாரத் தில் ஈடுபட்டு வருகிறார். விஜய் செல்லும் இடங்களில் அலை, அலையாய் பெருமளவில் மக்கள் கூட் டம் திரண்டு வருகிறது.

இந்தநிலையில், சென்னையில் நேற்று தியாகராயநகர், ஆயிரம் விளக்கு. எழும்பூர் ஆகிய 3 இடங்களில் விஜய் பிரசாரம் செய்தார்.மாலை 4.10 மணிக்கு தியாகராயநகர் முத்துரங்கன் சாலைக்கு விஜய்யின் பிரசார வாகனம் வந்தது. அங்கு அவரை பார்ப்பதற்காக பெரும் கூட்டம் திரண்டு இருந்தது. அங்கு தியாகராய நகர், ஆயிரம் விளக்கு, எழும்பூர் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த விஜய் 'ரோடுஷோ' நடத்தி வாக்கு சேகரித்தார்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தவெக தலைவர் விஜய் மீது 2 பிரிவுகளின் கீழ் மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நிபந்தனைகளை மீறி கூட்டம் கூட்டியது, அனுமதிக்கப்பட்ட நிகழ்வுக்கு பதிலாக ரோடு ஷோ நடத்தியது மற்றும் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பறக்கும் படை அதிகாரி சந்தோஷ்குமார் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைபோல தியாகராயர் நகர் தவெக வேட்பாளர் புஸ்ஸி ஆனந்த், தென் சென்னை மாவட்ட செயலாளர் அப்புனு ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com