சாராயம் விற்ற வாலிபர் கைது

சாராயம் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சாராயம் விற்ற வாலிபர் கைது
Published on

மயிலாடுதுறை திருவிழந்தூர் ஆடிய பிள்ளையார் கோவில் அருகில் சாராய விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சாராய விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் பிடிபட்டவர், மயிலாடுதுறை ரெயிலடி கிட்டப்பா பாலம் காவிரி கரையை சேர்ந்த அய்யப்பன் மகன் அரவிந்தன் (வயது21) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அரவிந்தனை கைது செய்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com