பழக்கடையில் பணம் திருடியவர் கைது

பழக்கடையில் பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
பழக்கடையில் பணம் திருடியவர் கைது
Published on

மணல்மேடு நூற்பாலை எதிர்புறம் வசித்து வருபவர் ஆனந்தராஜ் (வயது48). இவர் மணல்மேடு கடை வீதியில் பழக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு 11 மணி அளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று உள்ளார். மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு கடைக்கு வந்தபோது கடையின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்றபோது அங்கிருந்து ஒரு நபர் தப்பி ஓடினார். அவரை மடக்கி பிடித்து விசாரித்ததில் அவர் மணல்மேடு மாதா கோவில் தெருவை சேர்ந்த நிலவழகன் (40) என்பதும், பழக்கடையில் இருந்து ரூ.500 திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மணல்மேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com