பசு மாட்டை திருடியவரை மடக்கி பிடித்த உரிமையாளர்

பசு மாட்டை திருடியவரை உரிமையாளர் மடக்கி பிடித்தார்.
பசு மாட்டை திருடியவரை மடக்கி பிடித்த உரிமையாளர்
Published on

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டியை சேர்ந்தவர் அந்தோணி ராஜ் (வயது28). இவர் தனக்கு சொந்தமான பசுமாடு ஒன்றை கண்டமங்கலம் நாச்சியம்மன் கோவில் குளம் அருகே கட்டி வைத்திருந்தார். அந்த பசு மாட்டை கண்டமங்கலம் பரமேஸ்வரன் காலனியை சேர்ந்த புண்ணியமூர்த்தி (37) என்பவர் திருடிச்சென்றார். இதை கண்ட அந்தோணிராஜ் மாட்டை திருடிச்சென்ற புண்ணியமூர்த்தியை மடக்கி பிடித்தார். இதில் தப்பி ஓட முயன்று கீழே விழுந்ததில் புண்ணியமூர்த்திக்கு சிறு காயம் ஏற்பட்டது. இதையடுத்து திருக்காட்டுப்பள்ளி போலீசில் புண்ணியமூர்த்தியை ஒப்படைத்தார். இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் துரையரசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து புண்ணியமூர்த்தியை கைது செய்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com