கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கஞ்சா விற்ற வாலிபர் கைது
Published on

மயிலாடுதுறை காமராஜர் பஸ் நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபஸ்ரீ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மயிலாடுதுறை அவையாம்பாள்புரம் பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி மகன் தமிழ்மணி (வயது27) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com