மளிகை கடையில் திருடியவர் கைது

மளிகை கடையில் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
மளிகை கடையில் திருடியவர் கைது
Published on

நாகை மாவட்டம் திட்டச்சேரியை அடுத்த கட்டுமாவடி ஊராட்சி தண்டாளம் பள்ளிவாசல் தெருவில் பாஸ்கரன் (வயது 45) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் சம்பவத்தன்று இரவு மர்ம நபர் பூட்டை உடைத்து 2000 ரூபாய் மற்றும் மளிகை பொருட்களை திருடிச்சென்றார். இதுகுறித்து பாஸ்கரன் அளித்த புகாரின்பேரில் திட்டச்சேரி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நடுக்கடை கடைத்தெருவில் சந்தேகத்திற்கு உரிய வகையில் சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஆலத்தூர் மேலத்தெருவை சேர்ந்த செல்வராசு மகன் லட்சுமணன் (33) என்பதும், மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.2 ஆயிரம், ரூ.2 ஆயிரம் மதிப்பிலான மளிகை பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com