நடுரோட்டில் அரசு பஸ்சை வழிமறித்து தகராறு போதை ஆசாமி கைது

அழகம்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான பாலசுப்பிரமணி (27) என்பவர் திடீரென சாலையின் குறுக்கே வந்து பஸ்சை மறித்தார்.
நடுரோட்டில் அரசு பஸ்சை வழிமறித்து தகராறு போதை ஆசாமி கைது
Published on

கொடைரோடு,

நிலக்கோட்டை அருகே உள்ள ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 56). அரசு பஸ் டிரைவர். நேற்று இவர், நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல்லுக்கு பஸ்சை ஓட்டி சென்றார். பஸ்சில் திண்டுக்கல் குடைபாறைப் பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் (45) என்பவர் கண்டக்டராக இருந்தார். நிலக்கோட்டை- திண்டுக்கல் சாலையில் அழகம்பட்டி கண்மாய் அருகே பஸ் சென்று கொண்டிருந்தது.

அப்போது அழகம்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான பாலசுப்பிரமணி (27) என்பவர் திடீரென சாலையின் குறுக்கே வந்து பஸ்சை மறித்தார். பின்னர் டிரைவர், கண்டக்டரிடம் தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசில் ஆரோக்கியசாமி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியை கைது செய்தனர். போதையில் அவர் அப்படி செய்ததாக கூறப்படுகிறது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com