

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள அழகரை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 30). இவர் குளித்தலை அரசு மருத்துவமனையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மருத்துவமனையில் கும்பலாக இருந்தவர்களை வெளியேறுமாறு பிரகாஷ் கூறியதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த குளித்தலையைச் சேர்ந்த கார்த்திக்குமார் (30) என்பவர் பிரகாசை திட்டி தாக்கியுள்ளார். இதுகுறித்து பிரகாஷ் காடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் கார்த்திக்குமார் மீது வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.