தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவரை கத்தியால் தாக்கியவர் கைது

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே ஆட்டோ டிரைவர் ஒருவர், தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்ந்தார்.
தூத்துக்குடி தாளமுத்துநகர், சமீர்வியாஸ் நகரை சேர்ந்த பால்பாண்டியன் மகன் பூல்ராஜ் (வயது 36), ஆட்டோ டிரைவர். இவர் நேற்று இரவு தனது ஆட்டோவை பழைய பேருந்து நிலையம் அருகே நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் அவரிடம் செல்போனை தாருங்கள் போன் பேசி விட்டு தருகிறேன் என்று கேட்டுள்ளார்.
ஆனால் பூல்ராஜ் செல்போன் கொடுக்க மறுக்கவே ஆத்திரமடைந்த அந்த வாலிபர் அவரை கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த பூல்ராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் மத்தியபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு, செய்து அங்குள்ள சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து கத்தியால் தாக்கிய தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தை சேர்ந்த ஜெய்குமார் மகன் ஆரோக்கியராஜ்(35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






