முன்பகையில் வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கியவர் கைது

பேட்டை கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த ஒருவருக்கும், பேட்டை கருங்காடு ரோடு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்துள்ளது.
முன்பகையில் வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கியவர் கைது
Published on

திருநெல்வேலி மாநகரம் பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டபொம்மன் தெருவில் செல்வம் மகன் சாமுவேல் (வயது 33) என்பவர் வசித்து வருகிறார்.

சாமுவேலுக்கும் பேட்டை கருங்காடு ரோடு பகுதியில் வசிக்கும் சக்திவேல் மகன் மகேஷ்(எ) கண்ணன் என்பவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்துள்ளது.

அந்த முன்பகை காரணமாக 28.1.2026 அன்று கருங்காடு ரோட்டில் உள்ள மதுரைவீரன் கோயில் முன்பாக நின்று கொண்டிருந்த சாமுவேலை, மகேஷ் அவதூறு வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தி, இரும்பு கம்பியால் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தியுள்ளார்.

இதன் காரணமாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் சாமுவேல் கொடுத்த புகாரின் பேரில் பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மகேஷ்(எ) கண்ணனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com