நெல்லையில் வாலிபரை அரிவாளால் தாக்கியவர் கைது

பாளையங்கோட்டை பகுதியில் ஒருவருக்குத் தெரியாமல் அவரது மனைவி வாலிபர் ஒருவர் கொடுத்த செல்போனை வைத்திருந்த காரணத்தினால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
நெல்லையில் வாலிபரை அரிவாளால் தாக்கியவர் கைது
Published on

திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமலைகொழுந்துபுரம் பகுதியில் வசிக்கும் ராமகிருஷ்ணன் மகன் நல்லமுத்து (வயது 19) என்பவரின் மனைவி அவருடைய தாயாருடன், பாளையங்கோட்டை நாயனார் தெருவை சேர்ந்த மோகன் மகன் அருண்(எ) சிவா(26) என்பவரின் வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நல்லமுத்துக்குத் தெரியாமல் அருண்(எ) சிவா கொடுத்த செல்போனை நல்லமுத்துவின் மனைவி வைத்திருந்த காரணத்தினால் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது அருண்(எ) சிவா, நல்லமுத்துவை அவதூறு வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தி, அரிவாளால் தாக்கி, காயம் ஏற்படுத்தி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

இதுகுறித்து நல்லமுத்து கொடுத்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அருண்(எ) சிவாவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com