வாடகை பிரச்சினையில் வீட்டு உரிமையாளரின் கையை கடித்தவர் கைது

திருவான்மியூரில் வாடகை பிரச்சினையில் வீட்டு உரிமையாளரின் கையை கடித்தவரை போலீசார் கைது செய்தனர்.
வாடகை பிரச்சினையில் வீட்டு உரிமையாளரின் கையை கடித்தவர் கைது
Published on

சென்னை திருவான்மியூர் மங்களேரி பகுதியை சேர்ந்தவர் கமலாபாய் (வயது 68). இவருடைய வீட்டில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த திலகராஜ் (37) என்பவர் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்.

திலகராஜ் வீட்டு வாடகை பணத்தை முறையாக கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் அவரை வீட்டு உரிமையாளர் கமலாபாய் கண்டித்துள்ளார். அப்போது அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த திலகராஜ், கமலாபாயின் கையை கடித்தார். மேலும் வீட்டில் இருந்து குக்கர் மூடியை எடுத்து வந்து கமலாபாயின் மண்டையில் தாக்கினார். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. திலகராஜ் தப்பி ஓடிவிட்டார். காயம் அடைந்த கமலாபாய் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து அவரது மகள் திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கொலை முயற்சி, பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த திலகராஜ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com