டாஸ்மாக் பாரில் ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது

டாஸ்மாக் பாரில் ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
டாஸ்மாக் பாரில் ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது
Published on

திருச்சி முதலியார் சத்திரம் ஆலம் தெருவை சேர்ந்தவர் ராடன் (வயது 53). இவர் திருச்சி கருமண்டபம் பால்பண்ணை அருகில் உள்ள டாஸ்மாக் பாரில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவரிடம் பணத்தை பறித்து விட்டு, மது பாட்டில்களை பாரில் சேதப்படுத்திவிட்டு ஒரு வாலிபர் ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். விசாரணையில், கருமண்டபம் மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (27) என்பவர் தான் அவரிடம் பணத்தை பறித்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com