கூடங்குளத்தில் 27.7 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தவர் கைது

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நிஜல்சன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கூடங்குளத்தில் 27.7 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தவர் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நிஜல்சன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கூடங்குளம் பைபாஸ் ரோட்டின் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த மகமுத்அஹ்மத் (வயது 47) என்பவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட 27 கிலோ 776 கிராம் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கூடங்குளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மகமுத்அஹ்மதை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 27 கிலோ 776 கிராம் புகையிலை பொருட்களை கைப்பற்றி போலீசார் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com