சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினுகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது
Published on

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினுகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கோவிலம்மாள்புரம் மெயின் ரோடு அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த கோவிலம்மாள்புரத்தை சேர்ந்த சுடலைகண்ணு (வயது 37) என்பவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 1 கிலோ புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து மேற்சொன்ன சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சுடலைகண்ணுவை இன்று கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து சுமார் 1 கிலோ புகையிலை பொருட்களை கைப்பற்றி உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com