நெல்லையில் சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொது இடத்தில் வைத்து மது அருந்திய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லையில் சட்ட விரோதமாக மது விற்றவர் கைது
Published on

நெல்லை மாநகரம் சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஊருடையார்புரம் பகுதியில் மது விலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் ரோந்து பணிக்கு சென்றனர்.

அப்போது அப்பகுதியில் சட்டவிராதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட நெல்லை, வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முத்தையா மகன் ராஜேந்திரன் (வயது 48) என்பவரிடமிருந்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, மது விலக்கு அமலாக்க பிரிவின்படி வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொது இடத்தில் வைத்து மது அருந்திய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com