சட்ட விரோதமாக 12 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தவர் கைது

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சட்ட விரோதமாக 12 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தவர் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், முனைஞ்சிப்பட்டி அரசு மருத்துவமனை அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த முனைஞ்சிபட்டியை சேர்ந்த சுடலைகண்ணு (வயது 42) என்பவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 12 கிலோ புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சுடலைக்கண்ணுவை போலீசார் கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து சுமார் 12 கிலோ புகையிலை பொருட்களை கைப்பற்றி உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com