பெட்டிக்கடையில் 9 கிலோ தடை செய்த புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது

எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் காட்டுநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை செய்தனர்.
பெட்டிக்கடையில் 9 கிலோ தடை செய்த புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் இன்று எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை செய்தனர்.

அப்போது அந்த கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடையின் உரிமையாளரான அதே பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 51) என்பவர் சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

உடனே மேற்சொன்ன போலீசார் கண்ணனை கைது செய்து அவரிடமிருந்த 9 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com