நெல்லையில் கஞ்சா விற்றவர் கைது: பைக் பறிமுதல்

நெல்லை மாநகரில் ரோந்து பணியின்போது போலீசார் ஒருவரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது அவர் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து அவதூறு வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தியுள்ளார்.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பழனிமுருகன் மற்றும் காவல் துறையினர் பாளையங்கோட்டை, ராம் பாப்புலர் சந்திப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த பாளையங்கோட்டை எம்.கே.பி. நகரை சேர்ந்த பெருமாள் மகன் முத்துசாமி (வயது 36) என்பவரை நிறுத்தி போலீசார் சோதனை செய்ய முயன்றபோது காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்து அவதூறு வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து போலீசார் சோதனை செய்ததில் அவர் விற்பனைக்கு மறைத்து வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சுமார் 240 கிராம் கஞ்சா மற்றும் அதனை கொண்டு செல்ல பயன்படுத்திய பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து முத்துசாமியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story






