உடன்குடியில் மது விற்றவர் கைது; மற்றொருவர் மீது வழக்குப்பதிவு

உடன்குடி பகுதியில் குலசேகரப்பட்டினம் போலீசார் சட்ட விரோதமாக மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா என தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
உடன்குடியில் மது விற்றவர் கைது; மற்றொருவர் மீது வழக்குப்பதிவு
Published on

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பகுதியில் குலசேகரப்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் முகேஷ்அரவிந்த் தலைமையிலான போலீசார் சட்ட விரோதமாக மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா என நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உடன்குடி பஸ் நிலையம் செல்லும் வழியில் மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கிருந்த ஒருவரை சந்தேகத்தின்பேரில் போலீசார் சோதனை செய்தனர். அதில் அவர் பையில் 50 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் உடன்குடி பிள்ளையார் பெரியவன்தட்டையை சேர்ந்த கார்த்தீசன் (வயது 54) என்பதும், அவர் சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவருக்கு உடந்தையாக இருந்த உடன்குடி சுல்தான்புரத்தைச் சேர்ந்த மற்றொரு நபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com