திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது

தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
திருச்சி
தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கேரளா, அசாம், பஞ்சாப், கோவா உள்பட பல்வேறு மாநிலங்களில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.
அதேவேளை, அந்த மாநிலங்களை சேர்ந்த லாட்டரி சீட்டுகளை தமிழகத்தில் கள்ளத்தனமாக விற்பனை செய்யும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், மணப்பாறையில் தடைசெய்யப்பட்ட அசாம் மாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்த பெருமாள் என்பவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து அசாம் லாட்டரி சீட்டுகள், செல்போனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






