தூத்துக்குடியில் புகையிலை, மதுபாட்டில்கள் விற்றவர் கைது


தூத்துக்குடியில் புகையிலை, மதுபாட்டில்கள் விற்றவர் கைது
x
தினத்தந்தி 30 March 2025 2:16 PM IST (Updated: 30 March 2025 2:26 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட 37.8 கிலோ புகையிலை பொருட்கள், 29 மதுபான பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து அப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி, தூத்துக்குடி ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. சுதீர் மேற்பார்வையில் சிப்காட் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையில் எஸ்.ஐ. சுப்புராஜ் மற்றும் போலீசார் நேற்று (29.03.2025) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடியில் மடத்தூர், தெற்கு தெருவில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த மாடதங்கம் மகன் ராஜவேல் (வயது 54) என்பதும், அவரது வீட்டில் சட்டவிரோத விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

உடனே மேற்சொன்ன போலீசார் ராஜவேலை கைது செய்து அவரிடம் இருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 37 கிலோ 800 கிராம் புகையிலை பொருட்கள் மற்றும் 29 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Next Story