உடன்குடியில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை : கள்ளக்காதலன் கைது


உடன்குடியில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை : கள்ளக்காதலன் கைது
x

அடிக்கடி வீட்டிற்கு வந்து இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துவிட்டு செல்வது வழக்கம்.

நெல்லை,

தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் இசக்கிராஜ் (வயது 20), தொழிலாளி. இவருக்கும், குலசேகரன்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் அடிக்கடி குலசேகரன்பட்டினம் சென்று வந்தார்.

அப்போது, அந்த பெண் இருக்கும் பகுதியில் குமரி மாவட்டத்தை சேர்ந்த திருமணமான இளம்பெண் தனது 4 வயது மகளுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த பெண்ணுடன் இசக்கிராஜிக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.இதையடுத்து அந்த பெண் தனது குழந்தையுடன் உடன்குடி செட்டியாபத்தில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேறினார். அங்கு இசக்கிராஜ் அடிக்கடி வந்து சென்றார்.

நேற்று முன்தினம் குழந்தைக்கு திடீரென்று உடல் நலம் சரிஇல்லாமல் போனது. இசக்கிராஜ், இளம்பெண்ணும் குழந்தையை உடன்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதுபற்றி அறிந்த குலசேகரன்பட்டினம் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இசக்கிராஜ், குழந்தையின் தாயாரிடம் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனையில் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்ததில் இறந்ததும், அதனால் உடலில் காயங்கள் ஏற்பட்டதும் தெரியவந்தது.இதையடுத்து இசக்கிராஜை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. விசாரணையில் இசக்கி ராஜ் கூறியதாவது:-

நானும், சிறுமியின் தாயாரும் நெருக்கமாக பழகி வந்தோம். அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துவிட்டு செல்வது வழக்கம். சம்பவத்தன்று இளம்பெண் வீட்டிற்கு உல்லாசமாக இருக்க சென்றேன். அப்போது இளம்பெண் வீட்டில் இல்லை. இது எனக்கு ஏமாற்றத்தை அளித்தது. குழந்தை மட்டும் தனியாக இருந்தது. எனது பார்வை குழந்தை பக்கம் விழுந்தது. அந்த குழந்தையை பாலியல் ரீதியில் துன்புறுத்தல் செய்து கொண்டிருந்தபோது, திடீரென மூச்சுத்திணறியது. அப்போது அங்கு வந்த குழந்தையின் தாயார் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என அதிர்ச்சியுடன் கேட்டார். குழந்தை குடிக்க தண்ணீர் கேட்டாள் அதனை கொடுத்தேன். அப்போது குழந்தை தண்ணீரை வேகமாக குடித்ததால் மூக்கு வழியாக தண்ணீர் சென்றதில் மூச்சுத்திணறி குழந்தை மயங்கிவிட்டதாக நாடகம் ஆடினேன். இதை நம்பிய இளம்பெண்ணும் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

நான் தப்பித்துவிடலாம் என நினைத்தேன். ஆனால் டாக்டர்கள் பரிசோதனையில் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது. உடலில் காயங்கள் இருண்டதால் சந்தேகம் அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பிரேத பரிசோதனையில் மாட்டுக்கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார்.இசக்கிராராஜ் கூறியதை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். உடன்குடியில் 4 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமையில் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story