

சென்னை,
தென்காசியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், சென்னை பெருங்களத்தூரில் இருந்து பஸ்சில் சென்றபோது, ஒரு நபர் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
தென்காசியை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி, சென்னையில் விடுதியில் தங்கி படித்து வருகிறார். கடந்த 20-ந் தேதி பெருங்களத்தூரில் இருந்து பஸ்சில் வந்தபோது, ஆவடியை சேர்ந்த கருணாமூர்த்தி (வயது 42) என்பவர் ஓடும் பஸ்சில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து பொதுமக்கள் உதவியுடன் அவரை பிடித்து ஜெ.ஜெ. நகர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் கருணாமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.