வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது

செல்போனில் குறுந்தகவல் மூலம் தகவல் அனுப்பி அடிக்கடி தொல்லை கொடுத்துள்ளார்.
வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது
Published on: 

சென்னை,

சென்னை கண்ணகிநகரைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 43). இவருக்கு இணையதளம் வாயிலாக பெண் ஒருவர் வேலை தேடும் தகவல் கிடைத்தது. இவர், அந்த பெண்ணிடம் வேலை வாங்கி தருவதாக இணையதளம் வாயிலாக தகவல் அனுப்பினார். திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த 39 வயது நிரம்பிய அந்த பெண், ராஜேஷ் வேலை வாங்கி தருவார் என்று நம்பி அவரை நேரடியாக சந்தித்து பேசினார்.

அப்போது அந்த பெண்ணிடம் ராஜேஷ் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. பின்னர் அந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியாக செல்போனில் குறுந்தகவல் மூலம் தகவல் அனுப்பி அடிக்கடி தொல்லை கொடுத்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அந்த பெண், திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து ராஜேசை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com