புதுவையில் இருந்து நூதன முறையில் 120 மது பாட்டில்களை கடத்தி வந்த நபர் கைது

உடலில் டேப் போட்டு ஒட்டி 120 மது பாட்டில்களை கடத்தி வந்த நபரை போலீசார் கைதுசெய்தனர்.
புதுவையில் இருந்து நூதன முறையில் 120 மது பாட்டில்களை கடத்தி வந்த நபர் கைது
Published on

புதுவையில் மதுபானங்களின் விலை குறைவாக இருப்பதால், அங்கிருந்து தமிழகத்துக்கு மது பாட்டில்களை நூதன முறையில் கடத்தும் சம்பவங்கள் நடந்து வருகிறது. மதுபாட்டில்கள் கடத்துவதை கண்டறிந்து போலீசார், அதனை தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், விழுப்புரம் பகுதியை சேர்ந்த நாகமணி என்பவர் நூதன முறையில் புதுவையில் இருந்து மது பாட்டில்களை கடத்தியுள்ளார். அதாவது நாகமணி, தனது முதுகு, வயிறு, இடுப்பு,தொடை, கால் என உடலின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 120 மதுபானங்களை செல்லோ டேப் போட்டு வளைத்து வளைத்துக் கட்டியிருந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com