நெல்லையில் 6 கோழிகள் திருடியவர் கைது

பழவூர், பால் பண்ணை தெருவைச் சேர்ந்த மாரிமுத்து, சுத்தமல்லியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் வீட்டில் கோழிகளை திருடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
திருநெல்வேலி
நெல்லை மாவட்டம், சுத்தமல்லி, செந்திஅம்மன் கோவில் தெருவை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (வயது 66), தனது வீட்டின் தோட்டத்தில் 6 கோழிகளை வளர்த்து வந்துள்ளார். 25.04.2025 அன்று இரவு கோழிகளை கூட்டில் அடைத்துவிட்டு சென்றுள்ளார். பின்பு மறுநாள் காலை வந்து பார்த்தபோது 6 கோழிகளை காணவில்லை. இதுகுறித்து நவநீதகிருஷ்ணன் சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தார். விசாரணையில் பழவூர், பால் பண்ணை தெருவைச் சேர்ந்த மாரிமுத்து (47) என்பவர் கோழிகளை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன், மாரிமுத்துவை நேற்று முன்தினம் (29.04.2025) கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 6 கோழிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story






