நெல்லையில் செம்மண் திருடியவர் கைது; லாரி பறிமுதல்

நெல்லை மாநகரம் தச்சநல்லூர், தேனிர்குளம் வாட்டர் டேங்க் அருகில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நெல்லையில் செம்மண் திருடியவர் கைது; லாரி பறிமுதல்
Published on

நெல்லை,

திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேனிர்குளம் வாட்டர் டேங்க் அருகில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியே வந்த டிப்பர் லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில் எவ்வித அரசு அனுமதியின்றி லாபம் ஈட்டும் நோக்கத்துடன் விற்பனைக்காக திருட்டுத்தனமாக செம்மண் எடுத்து சென்ற தூத்துக்குடி மாவட்டம் நாணல்காடு பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (வயது 42) என்பவரிடமிருந்து லாரியை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து தச்சநல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, மேற்சொன்ன நபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com