ராதாபுரத்தில் எம்.சாண்ட் மணல் திருடியவர் கைது: லாரி பறிமுதல்

ராதாபுரத்தில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஓட்டி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
ராதாபுரத்தில் எம்.சாண்ட் மணல் திருடியவர் கைது: லாரி பறிமுதல்
Published on

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம், மருதப்பபுரம் ஜங்ஷன் அருகே சப்-இன்ஸ்பெக்டர் சகாயராபின் ஷாலு தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு, பலுகல்லை சேர்ந்த ராஜேஷ் (வயது 45) ஓட்டி வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் உரிய அனுமதிச்சீட்டு இல்லாமல் சட்டவிரோதமாக எம்.சாண்ட் மணல் ஏற்றிவந்தது தெரியவந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உரிய அனுமதிச்சீட்டு இல்லாமல் எம்.சாண்ட் மணல் ஏற்றி வந்த ராஜேஷை நேற்று முன்தினம் கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து சுமார் 30 டன் எடையுள்ள எம்.சாண்ட் மணல் மற்றும் ஒரு லாரியை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com