

பிரம்மதேசம்,
பிரம்மதேசம் அருகே உள்ள டி.நல்லாளம் கிராமத்தில் வசிப்பவர் மூர்த்தி மகன் பாபு (வயது 25). இவர் அதே கிராமத்தில் அங்காளம்மன் கோவில் ஒன்றை வைத்துள்ளார்.
நேற்று மதியம் வேப்பேரி கிராமத்தை சேர்ந்த ராஜி மகன் ராமலிங்கம் (வயது 42) என்பவர், கோவிலுக்குள் சென்று அங்கிருந்த பித்தளை தவலை பாத்திரத்தை திருடியதாக கூறப்படுகிறது.
இதை பார்த்த அப்பகுதி மக்கள், ராமலிங்கதை மடக்கி பிடித்து பிரம்மதேசம் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமலிங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.