நெல்லையில் பெண்ணை அவதூறாக பேசி அச்சுறுத்தியவர் கைது


நெல்லையில் பெண்ணை அவதூறாக பேசி அச்சுறுத்தியவர் கைது
x

நெல்லை மாநகரம், விளாகம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்தது.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விளாகம் பகுதியை சேர்ந்த சீதாலட்சுமி (வயது 47) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான பாலகிருஷ்ணன்(58) என்பவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்தது.

இதன் காரணமாக பாலகிருஷ்ணன், சீதாலட்சுமியை அவதூறு வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தியுள்ளார். இதுகுறித்து சீதாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

1 More update

Next Story