முதியவரிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது

தூத்துக்குடியில் முதியவரிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
முதியவரிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது
Published on

தூத்துக்குடி சங்கராபுரத்தை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 62). இவர் நேற்று முன்தினம் தூத்துக்குடி உழவர் சந்தை அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மட்டக்கடை வடக்கு ராஜா தெருவை சேர்ந்த அந்தோணி பிச்சை மகன் மரிய அந்தோணி ஆக்னல் என்ற ஆக்னல் (வயது 23) என்பவர் அவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மரிய அந்தோணி ஆக்னலை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே கஞ்சா விற்றது, கொலை மிரட்டல் உள்பட 10 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com