வாலிபரிடம் பணம் கேட்டு அரிவாளை காட்டி மிரட்டியவர் கைது

நெல்லை மாநகரில் ஒருவர், கான்கிரீட் கூரை அமைக்க வாலிபர் ஒருவரிடம் பணம் கேட்டு அரிவாளைக் காட்டி மிரட்டியுள்ளார்.
வாலிபரிடம் பணம் கேட்டு அரிவாளை காட்டி மிரட்டியவர் கைது
Published on

திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலந்தைக்குளம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் இசக்கிவடிவு (வயது 30) என்பவர் ஊர் பொதுவில் அமைக்கப்பட்டுள்ள தலைவரின் படம் வைக்கப்பட்ட பீடத்தில் இருந்த கூரையை வேண்டுமென்றே இடித்துவிட்டு அதற்கு பதிலாக கான்கிரீட் கூரை அமைக்க பொதுமக்களிடம் பணம் கேட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அதே பகுதியை சேர்ந்த ஐயப்பன் மகன் முத்துக்குமார்(23) என்பவரிடம் இசக்கிவடிவு பணம் கேட்டு அரிவாளைக் காட்டி மிரட்டியுள்ளார். இதுகுறித்து ஐயப்பன் கொடுத்த புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கிவடிவு என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com