காரைக்குடியில் இளம்பெண்களை செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்தவர் கைது

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை செந்தில்குமார் ஆபாசமான முறையில் வீடியோ எடுத்திருந்தது தெரியவந்தது.
காரைக்குடியில் இளம்பெண்களை செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்தவர் கைது
Published on

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இளம்பெண்கள், கல்லூரி மாணவிகளை செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பேருந்து நிலையத்தில் இளம்பெண் ஒருவரை தனது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்தபோது அந்த நபர் பிடிக்கப்பட்டார்.

அந்த பெண் அளித்த புகாரின்பேரில் போலீசார் கானாடுகாத்தான் பகுதியை சேர்ந்த 45 வயதான செந்தில்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை ஆய்வு செய்தபோது அதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமான முறையில் அவர் வீடியோ எடுத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com