1.3 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது: பைக் பறிமுதல்

பாளையங்கோட்டை, திம்மராஜபுரம் பேருந்து நிலையம் அருகில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
1.3 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது: பைக் பறிமுதல்
Published on

திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திம்மராஜபுரம் பேருந்து நிலையம் அருகில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் வந்த கோட்டூர் பகுதியை சேர்ந்த நல்லகண்ணு மகன் ஆண்டி (வயது 53) என்பவரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அதில் அவர் விற்பனைக்கு மறைத்து வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சுமார் 1 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது. இதனையடுத்து கஞ்சா மற்றும் அதனை கொண்டு செல்ல பயன்படுத்திய இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஆண்டி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com