வீட்டின் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

வீட்டின் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி இறந்தார்.
வீட்டின் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
Published on

நாகூர் அருகே உள்ள பூதங்குடி கம்பர் தெருவை சேர்ந்த மாதவன் (வயது38). தொழிலாளி. இவர் கடந்த 9-ந் தேதி இரவு வீட்டின் மாடியில் தூங்க சென்றார். அப்போது நிலைதடுமாறி மாதவன் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு  சிகிச்சை பலனின்றி மாதவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com