காவிரி ஆற்றில் தவறி விழுந்தவர் பிணமாக மீட்பு

காவிரி ஆற்றில் தவறி விழுந்தவர் பிணமாக மீட்கப்பட்டார்.
காவிரி ஆற்றில் தவறி விழுந்தவர் பிணமாக மீட்பு
Published on: 

மயிலாடுதுறை அருகே உள்ள கோழிகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 56). இவர்  தீபாய்ந்தாள் அம்மன் கோவில் அருகில் உள்ள காவிரி படித்துறை பகுதியில் மதகில் அமர்ந்திருந்தார். அப்போது நிலை தடுமாறி ஆற்றில் விழுந்து, தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இந்த நிலையில் குமரக்கட்டளைதெரு பகுதியில் காவிரிஆற்றில் யாரோ மிதந்து வருவதை கண்ட அப்பகுதி மக்கள் அந்த நபரை மீட்டபோது அவர், இறந்த நிலையில் மிதந்து வந்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் அங்கு சென்று அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விசாரணையில் இறந்த நிலையில் மிதந்து வந்தவர் முருகன் என்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Daily Thanthi
www.dailythanthi.com