பாம்பு கடித்து வாலிபர் சாவு

பாம்பு கடித்து வாலிபர் இறந்தார்.
பாம்பு கடித்து வாலிபர் சாவு
Published on

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட சியாத்தமங்கை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 32). இவர், சம்பவத்தன்று வீட்டின் பின்புறம் உள்ள வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு பதுங்கி இருந்த பாம்பு ஒன்று அவரை கடித்து விட்டது. இதில், மயக்கம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து செந்தில்குமாரின் தந்தை காளியப்பன் கொடுத்த புகாரின்பேரில் திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com