தென்னை மரம் முறிந்து விழுந்ததில் மீன் வியாபாரி சாவு

தென்னை மரம் முறிந்து விழுந்ததில் மீன் வியாபாரி இறந்தார்.
தென்னை மரம் முறிந்து விழுந்ததில் மீன் வியாபாரி சாவு
Published on: 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியை சேர்ந்தவர் முனியசாமி (வயது40). மீன் வியாபாரி. சம்பவத்தன்று இவர் தனது மனைவி ஜீவிதாவுடன் வீட்டு மாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது காற்று பலமாக வீசியது. அப்போது மனைவி ஜீவிதா, நான் கீழே செல்கிறேன் சீக்கிரம் கீழே வாருங்கள் என சொல்லிவிட்டு கீழே சென்று விட்டார். இந்த நிலையில் அதிகமாக காற்று வீசியதில் அருகில் இருந்த பழைய தென்னை மரம் ஒன்று திடீரென முறிந்து வீட்டின் மீது விழுந்துள்ளது. இதில் முனியசாமி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாச்சியார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com