லாரி மோதி முதியவர் சாவு

லாரி மோதி முதியவர் இறந்தார்.
லாரி மோதி முதியவர் சாவு
Published on

திருவையாறு அருகே விளாங்குடி மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (94). இவர் நேற்று முன்தினம் விளாங்குடி கொள்ளிடம் ஆற்றுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு நடந்து வந்துகொண்டிருந்தார். விளாங்குடி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது தஞ்சையில் இருந்து திருமானூர் நோக்கி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக வெங்கடாசலம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த வெங்கடாசலத்தை 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வெங்கடாசலம் நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து வெங்கடாசலம் மகன் ரவிச்சந்திரன் (52) திருவையாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com