

விராலிமலை:
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை சேர்ந்தவர் சுலைமான் மகன் ரசீத் அலி (வயது 41). இவர் திருச்சியில் உள்ள ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். நேற்று மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து விராலிமலை வழியாக திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார். விராலிமலை அருகே கொண்டமநாயக்கன்பட்டி பிரிவு சாலை அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் பிரேக் பிடிக்காததால் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த ரசீத் அலியை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரசீத் அலி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.