

ஊஞ்சலூர்.
கோவையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற பயணிகள் ரெயில் இன்று காலை 11.37-க்கு மணிக்கு கொளாநல்லி ரயில்வே கிராசிங் தாண்டி வந்தது.
அப்போது படியில் இருந்து சுமார் 35 வயது உடைய நபர் கீழே விழுந்து உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்து உள்ளார்.
பின்னர், இதனை அறிந்து ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தார்.
இது தொடர்பாக ரெயிலவே போலீசார் கூறுகையில்,
உயிரிழந்த நபரின் சட்டை பாக்கெட்டில் கோவையில் இருந்து திருநெல்வேலி செல்வதற்கு டிக்கெட் இருந்தது. அவரது செல்போன் சேதம் அடைந்த நிலையில் கிடைத்து உள்ளது. அவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தெரிவித்தார்.